உத்திரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் தானிப்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அதாவது பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் பாய் விரித்து படுத்து தூங்குகிறார். அவருக்கு அங்குள்ள குழந்தைகள் ஒருவருக்கு பின் ஒருவராக மாறி மாறி விசிறி விடுகிறார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது விசாரணை நடத்தப்படும் என கல்வித்துறை அதிகாரி ராகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகள் முடிவடைந்த பிறகு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கொடுத்துள்ளார்.