வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியுள்ளது. இது வக்ஃப் வாரியங்களில் இடம்பெறும் நிர்வாக நியமனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வக்ஃப் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அல்லது பதியப்பட்ட சொத்துகள் மீது, புதிய வக்ஃப் திருத்த சட்டத்தின் அடிப்படையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.