மாணவர்களுக்கு இரு மொழி கொள்கை போதுமானது என பொன்முடி கூறியதற்கு சரமாரியான கேள்விகளை பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா எழுப்பியுள்ளார் இது குறித்து பேசிய அவர், மாணவர்களின் இருமொழி கொள்கை குறித்து முடிவு செய்ய பொன்முடி யார் ? எந்த மொழி படிக்க வேண்டும் என மாணவனும் அவர்களது அம்மா அப்பா முடிவு செய்ய வேண்டும்.

ஊழல் கேஸ் வாங்கி இருக்கும் ஊழல்வாதி பொன்முடி எப்படி முடிவு செய்ய முடியும். திராவிடம் என்று சொன்னாலே ஊழல், கொள்ளை. பொன்முடி ஊழல் வழக்கில் இருக்கிற மனுஷன். மந்திரியா இருக்க அருகதை இல்லை. பொன்முடி அவர்களை கேட்டுக்கொள்கிறேன், 294 இன்ஜினியரிங் காலேஜ்ல அண்ணா யுனிவர்சிட்டி VC சொல்கிறார்.

950 ஆசிரியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லாரும் ஆதார் கார்டை போலியாக்கி , ஒரு காலேஜ்ல 11 ஆசிரியர்கள் இருக்கலாம். ஒரே ஆசிரியர் 11 காலேஜ்ல இருக்க முடியுமா ? அந்த மாதிரி துறையை கவனிப்பதற்கு வக்கற்ற, துப்பற்ற, திராணியற்ற, திறமையற்ற, பொன்முடி போன்ற ஊழல் பேர்வழிகள் நீங்கள் யார் முடிவெடுக்க என்று கேள்வி எழுப்பியுள்ளார்.