
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக நாளை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு வட மேற்கு திசையில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.