தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி மற்றும் மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காலை 8.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் சற்று வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.