
வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் நாளை ஒரு புதிய புயல் சின்னம் உருவாக உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் நேற்று விடிய விடிய பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. அதன்படி சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராமநாதபுரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. மேலும் தமிழகத்தில் வருகிற 8-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.