
மத்திய வங்க கடலில் இன்று சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனைப் போலவே நாளை 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஜூலை 7 முதல் ஜூலை 9ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும் மத்திய அரபுக் கடலில் ஜூலை 9ஆம் தேதி வரை இடை இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இதை உணர்வுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.