
வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கீடு கடந்த 2018 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் சிக்கி 130 பேர் உயிரிழந்த நிலையில் அந்நாடே கலவர பூமியாக மாறியது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றம் தற்போது சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீடை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் 130 பேர் கலவரத்தினால் உயிரிழந்துள்ளதால் மாணவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிடுமாறும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.