
வங்காள தேசத்தின் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் (83) ஏற்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முகமது யூனுஸை புதிய தலைவராக நியமித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். இவர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தி “நாட்டின் 2-வது விடுதலை நாள்” என்று அவர் தெரிவித்துள்ளார். தற்போது இவரை பற்றிய சில விஷயங்களை பார்க்கலாம். அதாவது இவர் 1983 ல் கிராமீன் வங்கி ஒன்றை நிறுவி, மக்களுக்கு சிறு கடன்களை கொடுத்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளார். இவருக்கு கடந்த 2006 ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் கடந்த 2007 ல் ஒரு அரசியல் கட்சியை தொடங்க போவதாக அறிவித்தார். ஆனால் அவர் தொடங்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2008 ல் ஹசீனா ஆட்சிக்கு வந்தார். அதன் பின் முகமது யூனுஸிடம் பல்வேறு விசாரணைகள் தொடங்க ஆரம்பித்தது. அதனால் அவர் ஹசீனாவின் ஆட்சியை கண்டிக்க தொடங்கினார். இதையடுத்து கடந்த 2011ல் கிராமீன் வங்கி தலைமையில் இருந்து அவர் விலகினார். அதோடு இந்த வருடம் யூனுஸ் மீது அந்நாட்டு நீதிமன்றம் மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்தது. இருப்பினும் அந்த குற்றச்சாட்டுகளை அவர் ஏற்கவில்லை. அதோடு அவருக்கு வழக்கில் இருந்து ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், தற்போது பிரான்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக சென்றுள்ளார். மேலும் அவர் நாடு திரும்பிய பிரகு தலைமை பொறுப்பை ஏற்க இருக்கிறார்.