வங்காள தேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதனால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வங்காளதேசத்தில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவதால் இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் சுமார் 1000 மாணவர்கள் இந்தியா திரும்பிய நிலையில் தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் எக்ஸ் பக்கத்தில் ஒரு முக்கிய குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வங்காள தேசத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவரின் அறிவுறுத்தலின் பேரில் இந்திய தூதரகத்தின் உதவியோடு ‌ இன்று இரவு வங்காளதேசத்திலிருந்து 35 தமிழர்கள் தாயகம் திரும்ப இருக்கிறார்கள். சென்னைக்கு வரும் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் அடுத்த கட்டமாக 60 பேரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.