
இந்தியாவில் வங்கிகளில் 10 வருடத்திற்கு மேலாக பயன்பாட்டில் இல்லாத டெபாசிட் கணக்குகளில் கோரப்படாத தொகையை ரிசர்வ் வங்கியின் DTA நிதிக்கு மாற்று நடவடிக்கையை தற்போது ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் மறந்துவிட்ட வைப்புத் தொகையை மீட்டெடுக்க உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் DTA மாற்றப்பட்ட டெபாசிட்டுகளின் விவரங்களை வங்கிகள் இணையதளத்தில் உள்ளிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்சம் ஒரு மாத அடிப்படையில் தொடர்ந்து தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.