நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் பந்த் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை சரி செய்ய புதிய ஆயுதத்தை கையில் எடுக்கவிருக்கிறது மத்திய அரசு. அதாவது, பிரதமரின் கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் ₹2000 தவணையை உடனே வழங்கிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக இம்மாத இறுதியில் பணம் வழங்கப்பட இருந்தது.

விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் பி எம் கிசான் திட்டமானது கடந்த 2019 வருடம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கான செலவுகளை செய்து கொள்ள இந்த பணமானது வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம்(3 தவணையாக ரூ.2000 வீதம்) வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது .