பொதுவாக வங்கியில் பணம் போடுப்பதற்கு பான் கார்டு அவசியமா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். தற்போது அது பற்றி விரிவாக பார்ப்போம். அதாவது பான் கார்டு என்பது வருமானவரித்துறையால் வழங்கப்படும் முக்கிய ஆவணமாகும். இந்த பான் கார்டு வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய ஆவணமாக பயன்படுகிறது. அதன் பிறகு முக்கிய பண பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வங்கியில் கணக்கு தொடங்கும் பொழுது அதற்கு பான் கார்டு அவசியமில்லை.

அதேபோன்று பணம் எடுப்பதற்கும் பான் கார்டு தேவை கிடையாது. ஆனால் ஒரே நாளில் ரூ‌.50,000-க்கும் மேல் பணம் எடுத்தால் அதற்கு பான் கார்டு அவசியம். அதேபோன்று ஒரு வருடத்தில் 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் பான் கார்டு அவசியம். இது தபால் நிலையத்திற்கும் பொருந்தும். தபால் நிலையத்தில் கணக்கு தொடங்குவதற்கு கண்டிப்பாக பான் கார்டு தேவை. மேலும் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் இரண்டுக்கும் இந்த பான் கார்டு செயல்முறைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.