இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும், வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி தொழிற்சங்கங்கள் மற்றும் இந்திய வங்கிகள் சங்கமிடையே 12வது இருதரப்பு தீர்ப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பொதுத்துறை வங்கி பணியாளர்கள் சம்பளத்தில் 15 முதல் 20 சதவீதம் உயர்வு மற்றும் ஐந்து நாள் வேலை உள்ளிட்டவை டிசம்பர் மாதம் இடையில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பணியாளர்களுக்கு 15 சதவீதம் சலுகை வழங்கப்படுவது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை. நிதி அமைச்சகத்தின் தகவலின் படி ஊதிய திருத்தம் மற்றும் வேலை நாட்களில் மாற்றம் ஆகியவை பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டு அதில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதும் இந்த அறிவிப்புகள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வங்கி ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.