இந்தியாவில் பொதுவாகவே வங்கி கணக்குகளில் போதையை இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை அபராதமாக வசூல் செய்யப்படும். இந்த அபராத தொகை வங்கிகளை பொறுத்து மாறுபடும். அதனைத் தொடர்ந்து ஏடிஎம் பண பரிவர்த்தனை சேவைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது ஏடிஎம் சேவைகளை பொருத்தவரை மூன்று முதல் ஐந்து பரிவர்த்தனைகளுக்கு இலவசமாகவும் அதற்குப் பிறகு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத காரணத்தால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து 35 ஆயிரம் கோடியை வசூலித்ததாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏடிஎம் பணப்பரிவர்த்தனை கட்டணமாக 8,289 கோடியும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு 6254 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.