இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 தேதி சுமார் இரவு 8.05 மணியில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் அறிவித்தார். அப்போது வங்கிகளில் பொதுமக்கள் தங்கள் கைவசம் இருக்கும் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்ட நிலையில் அந்த சமயத்தில் உத்திரபிரதேச மாநிலத்தில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கியில் கர்ப்பிணி பெண் ஒருவர் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில் அவருக்கு வங்கி வாசலில் பிரசவமானது.

அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இது ஆண் குழந்தைக்கு தற்போது ‌8 வயது ஆகும் நிலையில் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சிக்கும் விதமாக உத்திரபிரதேசம் மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தற்போது அந்த குழந்தையின் பிறந்தநாளை தன் கட்சி சார்பில் கொண்டாடியுள்ளார். அந்த சிறுவனுடன் பிறந்தநாள் கொண்டாடிய அகிலேஷ் யாதவ் கட்சியின் சார்பில் ஒரு சைக்கிளையும் வழங்கினார். மேலும் பின்னர் பேசிய அகிலேஷ் யாதவ் பாஜக கட்சி நாட்டின் பொருளாதாரத்தையும் கொள்கைகளையும் சிதைத்து விட்டதாக தெரிவித்தார்.