
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கிகள் விடுமுறை குறித்த பட்டியல் முன்னரே வெளியிடப்படுவது வழக்கம். இதனை அறிந்து வாடிக்கையாளர்கள் முன்னரே வங்கி தொடர்பான வேலைகளை முடித்துக் கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் வெளியாகி உள்ளது. அதில் மே மாதம் வங்கிகளுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட மொத்தம் 12 நாட்கள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மூலமாக சேவைகள் தடை இன்றி வழங்கப்படுகிறது.
விடுமுறை பட்டியல்:
மே 1- திங்கட்கிழமை – மகாராஷ்டிரா தினம்/மே தினம் – பேலாபூர், பெங்களூரு, சென்னை, குவாஹாத்தி, ஹைதராபாத், இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம்
மே 2 – செவ்வாய் – மாநகராட்சி தேர்தல் – சிம்லா
மே 5 – வெள்ளி – புத்த பூர்ணிமா – அகர்தலா, ஐஸ்வால், பேலாப்பூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீநகர்
மே 7 -ஞாயிற்றுக்கிழமை -ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
மே 9 – செவ்வாய் – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் -கொல்கத்தா
மே 13 -சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை – எல்லா இடங்களிலும்
மே 14 – ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
மே 16 – செவ்வாய் – மாநில தினம் (சிக்கிம்) – காங்டாக்
மே 21 – ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்
மே 22 – திங்கட்கிழமை – மகாராணா பிரதாப் ஜெயந்தி – சிம்லா
மே 27 – சனிக்கிழமை – நான்காவது சனிக்கிழமை – எல்லா இடங்களிலும்
மே 28 – ஞாயிற்றுக்கிழமை -ஞாயிற்றுக்கிழமை – எல்லா இடங்களிலும்