மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு,  டங்ஸ்டன் கனிம சுரங்கம் வருகின்ற வரை 9 மாதம் திமுக அரசு தூங்கிக் கொண்டிருந்தது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு எதிராக குரல் எழுப்பி பேசினார். ஆனா இன்னைக்கு வெற்றி வெற்றி என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது மத்திய சுரங்கத் துறை அமைச்சரை அழைத்து வந்து அண்ணாமலை நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

டங்ஸ்டன் கனிம திட்டம் வந்ததற்கு மத்திய மாநில அரசுகள் தான் முழு காரணம், மக்களை இந்த அளவிற்கு போராட வைப்பது தேவையா? இத்தகைய பதட்டம் எதற்கு என்று எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கேட்ட பிறகு தான் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு முடிவு கிடைத்தது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். இந்த விவகாரத்திற்கு தீர்வு கிடைத்ததற்கு முழுமையான காரணம் அதிமுக மட்டும் தான்.