
வாங்கிய கடன் ரூ.50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி அளிக்கும் படி, பிரபல காமெடி நடிகர் யூகி சேதுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்ச தந்திரம் உள்ளிட்ட திரைபடங்களில் நடித்துள்ள யூகி சேது, சென்னை தனியார் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கியுள்ளார். ஆனால், அதை திரும்ப அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9% வட்டியுடன் திரும்ப செலுத்த உத்தரவிட்டுள்ளது.