2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது தற்போது இரண்டாவது வாரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பலமான அணியாக இருந்த ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூர் அணி நேற்று முன்தினம் தன்னுடைய சொந்த மண்ணான சின்னசாமி மைதானத்தில் தோல்வியை சந்தித்தது. எட்டு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஐட்டம்ஸ் அணி வெற்றியை கைப்பற்றியது. இந்த போட்டியின் போது பெங்களூர் அணியின் சார்பாக விளையாட இருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி பில்டிங் செய்யும் போது காயம் அடைந்தா.ர் அதாவது போட்டியில் 12வது ஓவரில் விராட் கோலி பவுண்டரியில் பந்து தடுக்க முயன்ற போது பந்து அவர் கையில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவருக்கு உடனடியாக பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் முதலுதவி வழங்கப்பட்டது. ஆனாலும்  கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிது நேரம் வலியால் துடித்தார். இதன் காரணமாக எதிர்வரும் ஆட்டங்களை அவர் தவற விட வாய்ப்பு இருப்பதாகவும் வதந்திகள் பரவியது. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து கூறுகையில், விராட் கோலி நலமோடு உள்ளார். அவருக்கு பெரிய அளவில் எந்த காயமும் இல்லை. தற்போது மிக சிறப்பாக முழு உடல் தகுதியோடு உள்ளார். இதன் காரணமாக விராட் கோலி எந்த போட்டிகளையுமே தவற விட மாட்டார். எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் நிச்சயம் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.