சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நிர்வகிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் போட்டி தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி. இந்த போட்டியில் 27 லீக்  தொடர்களில் 9 அணிகள் 69 போட்டிகள் விளையாடுகின்றன. இதனை தொடர்ந்து முடிவில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இருக்கும் அணிகள் லண்டனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள். இந்த நிலையில் இந்த போட்டியின் விதிமுறையில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வரும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு புதிய விதிமுறைகளை கொண்டு வருவதற்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஆனது திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி இந்த போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிக்கு போனஸ் புள்ளிகள் வழங்கப்படலாம் என்றும் அவே(away) போட்டியில் வெற்றி பெற்றால் கூடுதல் புள்ளிகள்  வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.