
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வந்தே பாரத் விரைவு ரயில்களில் பயணிகள் சார்பில் ஏராளமான புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். போபாலில் இருந்து சமீபத்தில் ஆக்ராவிற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த தம்பதிக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
அதாவது அவர்கள் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதனைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர வைத்துள்ளது. இது குறித்து ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.