
சென்னையிலிருந்து மைசூருக்கு இன்று வந்தே பாரத் ரயில் கிளம்பியது. இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வந்து கொண்டு இருந்தது. இந்த ரயிலில் குஷ் நாத்கர் (31) என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ரயிலில் சார்ஜ் போட்டபடியே செல்போனில் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இந்த ரயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென செல்போன் பயங்கரமாக சூடாகி வெடித்தது. இதில் அந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் வலியால் அலறி துடித்தார். அதோடு போன் வெடித்ததில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் சக பயணிகளும் அலறினர். உடனடியாக ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சென்று திறந்து புகையை வெளியேற்றினர். அதோடு பாதிக்கப்பட்ட வாலிபரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். மேலும் இதனால் 35 நிமிடங்கள் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.