கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோட்டையை  நோக்கி நேற்று “வந்தே பாரத்” என்ற ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் காலை உணவாக வழங்கப்பட்ட இடியாப்பம் பார்சலை திறந்து பார்க்கும் போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த பார்சலில் இருந்து கரப்பான் பூச்சிகள் சிதறி ஓடி உள்ளது. இதனால் பயணிகள் ரயில்வே ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் அவர்கள் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து ரயில்வே உணவு ஒப்பந்ததாரர் கூறியதாவது, இந்த உணவுகளை தயாரிக்கும் போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சுத்தமான முறையில் பேக் செய்யப்படுகிறது. பின் பேக் செய்யப்பட்ட உணவுகளை ரயிலில் ஏற்றி வைப்பார்கள். அங்கிருக்கும் கரப்பான் பூச்சிகள் பார்சலில் புகுந்து இருக்கலாம். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறினர்.