
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போபாலின் ராணி கமலாபதி நிலையத்திலிருந்து ஹஜ்ரத் நியாகுத்தின் இன்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த அபய் சிங் செங்கர் என்னும் பயணி ஒருவர் ரயிலில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கினார். அதனை அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென உணவில் பூச்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர் அந்த பூச்சியை வீடியோவாக பதிவு செய்து, ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சீக்கிரம் மாற்று உணவு வழங்கப்படாததால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த அபய் சிங் செங்கர் கவலையுடன் குவாலியூர் நிலையத்தில் இறங்கினார். இதனால் ரயில்வே சுகாதார தரத்தில் குறைபாடுகள் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவம், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. IRCTC நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு தரங்களை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மும்பை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பயணி உப்புமாவில் பூச்சி இருப்பதாக புகார் கொடுத்தார். இதற்கு அதிகாரிகள் எச்சரிக்கையாக இருப்போம் என்ற பதிலை மட்டும் அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.