இந்தியாவில் நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கூட டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் உள்ளது. இந்நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக ரயில்வே பரிசிலீத்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

நெடுந்தூரம் பயணிக்கும் வந்தே பாரத் ரயில்களில் 100% இருக்கைகள் நிரப்பப்பட்டு பயணிக்கின்றன. ஆனால் குறைந்த தூரங்களுக்கு பயணிக்கும் சில வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த ரயில்களில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதே காரணமாக இருப்பதால் டிக்கெட் கட்டணத்தை குறைப்பதற்கு ரயில்வே நிர்வாக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.