
மகாராஷ்டிராவின் வனப்பகுதியில் மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் சிந்து துர்க் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் மரத்தின் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்த பெண் ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார்.
அவரிடம் இருந்து அமெரிக்க பாஸ்போர்ட்டின் நகல், தமிழ்நாடு முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டன. தற்போது மீட்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக கோவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் குறித்து முழு விவரங்கள் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.