90 நடிகைகளான மீனா, மகேஸ்வரி, சங்கீதா ஆகியோர் “ஹலோ மிஸ்டர் காதலா”  என்ற பாடலுக்கு ஆட்டம் போடுகிறார்கள். இந்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது அவர்கள் போடும் டான்ஸ்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள் . 1998 ஆம் வருடம் வெளியான பிரபு தேவா நடித்துள்ள நாம் இருவர் நமக்கு இருவர் என்ற படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது இந்த படமானது அப்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த படத்தை சுந்தர் சி இயக்கிய நிலையில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். மேலும் ஜெயராம், மகேஸ்வரி, ஜெமினி கணேசன், செந்தில், விவேக், மணிவண்ணன் ,எஸ். சந்திரன் என பலரும் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.