அரியலூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 64 வயதான முருகேசன் என்ற முதியவரிடம், அவருடைய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ராஜசேகர், கார்த்திகேயன் என்ற இருவரும் மொத்தம் ரூ.3 லட்சம் ஆகும் என்று கூறி, ரூ.2.10 லட்சம் முன்பணம் வாங்கி உள்ளனர்.

ஆனால், வேலை வாங்கித் தராமல் 2 வருடங்களாக ஏமாற்றிவந்துள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர் நடையாய் நடந்து அலைந்து கேட்கும் போது இதோ அதோ என்று சுமார் 2 வருடங்களாக தட்டி கழித்து ஏமாற்றி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மிகுந்த மனஉளைச்சல் மற்றும் கோபமடைந்த முதியவர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இருவரும் மோசடி செய்தது உண்மை எனத் தெரிந்துகொண்டனர். அதன்பின்னர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராஜசேகர், கார்த்திகேயன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.