வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முண்டகை மற்றும் சூரல்மலா கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்க தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்ட 4வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன.அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.