தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது புஷ்பா 2 மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அவர் நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

அதாவது கேரளா மாநிலம் வயநாடு என்ற பகுதியில் ஓரிரு நாட்களுக்கு முன்பாக தொடர் கனமழையின் காரணமாக பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த மக்களுக்கு உதவி செய்வதற்காக விக்ரம் ரூ. 20 லட்சம் நிதி உதவி செய்தார். இதைத்தொடர்ந்து கேரள முதல் மந்திரியின் பொது நிவாரண நிதிக்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ 50 லட்சம் தொகையை வழங்கியுள்ளனர். மேலும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா வயநாடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ 10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்.