கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நிலச்சரிப்பில் சிக்கி இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் 1592 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த 96 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் 166 பேரின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு முடிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நிலையில் வயநாடு மக்களுக்கு உதவ பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில் நிவாரண பணிகளுக்காக நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்