
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் இதுவரை 276 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியே முழுவதுமாக கோரத்தாண்டவத்தில் காட்சியளிக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதிகளில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரீசார்ஜ் முடிவடைந்து இருந்தால் அவர்களால் மீண்டும் ரீசார்ஜ் செய்ய முடியாது. இதன் காரணமாக 3 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்றவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 30 நாட்களுக்கு நீட்டித்தும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.