
இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. இதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் சஹாஸ்வான் என்ற பகுதியில் சமீபத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
அங்கு வயலில் இருந்த 12 வயது சிறுமியை 25 வயது வாலிபர் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டனர். உடனே தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.