
பிரேசிலை சேர்ந்த லூக்கஸ் ஹென்றி என்ற நபர் டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஹென்றியை பிடித்து விசாரித்தனர்.
அப்போது 1. 383 கிலோ எடை கொண்ட கொக்கையினை 127 மாத்திரை வடிவில் லூகாஸ் வயிற்றில் வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இந்த கொக்கைன் மதிப்பு 21 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதை எடுத்து கைது செய்யப்பட்ட அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது வயிற்றில் இருந்த கொக்கையின்கள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.