தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் ஆந்திர துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் நேற்று முன்தினம் முதல் 11 நாட்கள் விரதம் இருப்பதாக கூறியுள்ளார்.

அவர் ஆந்திராவின் நலன் கருதி அவர் விரதம் இருப்பதாக கூறியுள்ளார். அதாவது தன்னுடைய மாநில மக்களின் நன்மை, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் நலன் கருதி விரதம் மேற்கொள்கிறார். அவர் வராஹி அம்மனை வழிபடும் நிலையில் 11 நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருப்பார். மேலும் கடந்த வருடம் இதேபோன்று அவர் விரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.