வரி செலுத்துபவர்கள் தங்களது நிதி ஆவணங்களை ஒழுங்கமைக்கவும், இந்த நாட்களில் தங்கள் வரி சேமிப்பை அதிகரிக்கவும் எண்ணுகின்றனர். வழக்கமான வரி சேமிப்பு முதலீடுகளைத் தவிர்த்து ITR 2023-ஐ தாக்கல் செய்யும்போது, ​​பல விலக்குகள் இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். வருமான வரி சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் நீங்கள் கோரக்கூடிய விலக்குகளை நாம் தற்போது தெரிந்துகொள்வோம்.

அந்த வகையில் பிரிவு 80E-ன் கீழ் கல்விக் கடனுக்கான வட்டியில் நீங்கள் விலக்கு கோரலாம். இதையடுத்து தனிப்பட்ட வரி செலுத்துவோர், சுய, குழந்தைகள், மனைவி மற்றும் பெற்றோருக்கான தடுப்பு சோதனைகளில் ரூ.5000 வரை விலக்கு கோரலாம். இதனை வருமான வரிச் சட்டத்தின் 80D பிரிவின் கீழ் கோரலாம்.

அதேபோல் வரி செலுத்துபவர்கள் ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் பெறப்பட்ட தொகைக்கு விலக்கு கோரலாம்.  அதோடு பிரிவு 80CCD (1B)-ன் கீழ் NPS-க்கு அளிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கு நீங்கள் ரூ.50,000 வரை கூடுதல் விலக்கு கோரலாம் என கூறப்படுகிறது.