டெல்லியின் கேபாசேரா அருகே உள்ள பிரபலமான பன் அண்ட் புட் வாட்டர் பார்க் பகுதியில் வியாழனன்று நடந்த விபத்தில் 24 வயது பிரியங்கா என்ற இளம்பெண் உயிரிழந்தார். தனது வருங்கால கணவர் நிகிலுடன் சென்றிருந்த போது, ரோலர் கோஸ்டர் சவாரியின் அடித்தளம் முறிந்து விழுந்ததால், swing போன்ற ரைடிலிருந்த பிரியங்கா உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

பலத்த காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவரையும் ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது.

பிரியங்காவுக்கு, ஜனவரி 2023-ல் நிகிலுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் 2026-ஆண்டு  பிப்ரவரியில் திருமணம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதுகுறித்து போலீசார் பி.என்.எஸ் சட்டத்தின் கீழ் 289 மற்றும் 106 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பார்க் நிர்வாகம் இதுவரை எந்தவொரு விளக்கமும் வழங்காத நிலையில், சம்பவம் நடந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.