உத்தரகாண்ட், காசியாபாத் பகுதியில் அமைந்துள்ள ராஜ் நகரில் ஆஷு சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணுடன் (22) நண்பனாக பழகிய நிலையில் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர் . இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆஷு அந்த இளம் பெண்ணுடன் ரிஷிகேஷக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர்கள் தங்குவதற்காக அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது அந்த இளம் பெண்ணிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முயன்றுள்ளார். அதனை மறுத்த அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதன்பின் காசியாபாத்திற்கு திரும்பிய அவர்கள் இடையில் ஆஷுவின் நண்பர்களான முஸ்தபா, ஆதித்யா கபூர், யாஷ் அவுஜல் ஆகியோரை சந்தித்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பாதியிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

அதன் பின் வீடு திரும்பிய அந்தப் பெண் நடந்ததை தனது தாயிடம் கூறிய நிலையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி காவல்துறையில் புகார் கொடுத்தனர். இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் ஆஷு மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதோடு விசாரணையில் அந்த பெண்ணின் உடலில் 8 பகுதிகளில் கடித்த தடங்கள் இருந்ததும், பல காயங்கள் இருந்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த கொடூர சம்பவத்திற்கு ஏராளமான மக்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.