
நாடு முழுவதும் ஏராளமான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு. அதோடு நீண்ட தூர பயணத்திற்கும் வசதியாக இருக்கிறது. அதன் பிறகு ரயிலில் செல்லும்போது பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து செல்வார்கள்.
இந்நிலையில் தற்போது திடீரென ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கி விட்டது. ஏற்கனவே இரண்டு முறை இந்த இணையதளம் முடங்கிய நிலையில் நேற்று மூன்றாவது முறையாக முடங்கியது. இந்நிலையில் இன்று நான்காவது முறையாக ஐ ஆர் சி டி சி இணையதளம் முடங்கியுள்ளது. வருடத்தின் முதல் நாளான இன்று ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியுள்ளது. மேலும் இதனால் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.