இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று அதாவது ஜூலை 31ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக நேற்று ஏராளமானோர் வருமான வரி தாக்கல் செய்தார்கள். இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிக்கவில்லை. இதன் காரணமாக இன்று முதல் வருமான வரி செலுத்துவோருக்கு அபராதமானது விதிக்கப்படும். ‌

இந்நிலையில் பலர் புதிய வருமான வரிமுறை படி வரி செலுத்தும் நிலையில் பலர் பழைய கணக்கின்படி வரி செலுத்துகிறார்கள். இந்நிலையில் இன்று முதல் வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.5000 அபராதமாக வசூலிக்கப்பட இருக்கிறது. இவர்களில் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் கீழ் இருப்பவர்களுக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருமான வரி செலுத்துவோர் அதற்கு வட்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.