
வருமான வரி செலுத்துவோருக்கு ஜூலை மாதம் மிக முக்கியமான மாதம் ஆகும். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை ஏழரை கோடிக்கும் அதிகமானோர் ஐடிஆர் தாக்கல் செய்திருந்தனர். ஜூலை 31ஆம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும். ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் வருமானத்திற்கு ஏற்ப அபராதம் செலுத்த வேண்டும். விதிகளின்படி டிசம்பர் 31 வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
ஆனால் அதை இலவசமாக செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே. ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், ஐந்து லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். மேலும் வரி தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சில வகையான பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வணிகமானது அதன் சர்வதேச பரிவர்த்தனைகளில் பரிமாற்ற விலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் அத்தகைய வணிகத்திற்கு ஐடிஆர் தாக்கல் செய்ய கூடுதல் நேரம் வழங்கப்படும். அத்தகைய நபர்கள் நவம்பர் 30 வரை தாக்கல் செய்யலாம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.