
ஆடிட்டர் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து வரி பிடித்ததை திரும்ப பெறுவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இதை நாமே எளிதில் எந்த செலவும் இல்லாமல் செய்யலாம். வருமான வரி ஆணையத்தின் https:://www.incometax.gov.in/IEC/foportal/ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ரிஜிஸ்டர் என்ற பகுதியில் பான் கார்டு எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல் உருவாக்கி பயனாளராக வேண்டும்.
பான் கார்டு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு நுழைந்ததும் IT கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிதி ஆண்டை தேர்வு செய்து அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். வருமானம், அது ஈட்டப்பட்ட விதம், வரிவிலக்குகளை பதிவிட்டு return தொகையை ஆதாரம், E-sign மூலமாக உறுதி செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். இது சரிபார்க்கப்பட்டு வரி பிடித்த தொகை வங்கிக் கணக்கில் திருப்பி அளிக்கப்படும்.