
மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து துறை பல்வேறு பேருந்துகளை இயக்கி வருகின்றது. விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது .இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. அதன்படி வரும் 24ம் தேதி முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் மட்டும் இங்கு சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.