டி20 உலகக் கோப்பை 2024 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஓமன் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் களமிறங்கிய ஓமான் அணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதன் மூலம் அவர்கள் அணி 13.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து 3.1 ஓவர்களில் தனது (50/2) இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு பேசிய அகிப், 2024 டி20 உலகக் கோப்பை முழுவதும் டாப் ஆர்டர் ரன்களை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறினார்.மேலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 150 கிமீ வேகத்தில் பந்துவீசும்போது பேட்டர்கள் சிரமத்தை எதிர்கொண்டதாக அவர் கூறினார். “பேட்டிங்கில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. போட்டி முழுவதும் டாப் ஆர்டரால் ரன் எடுக்க முடியவில்லை. ஸ்கோர் போர்டில் ரன் அதிகம் எங்களால் சேர்க்க முடியவில்லை இதனால் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எங்களுடைய அசோசியேட் கிரிக்கெட்டில் மணிக்கு 130-140 கிமீ வேகத்தில் பந்து வீசும் பந்துவீச்சாளர்களை விளையாடப் பழகிவிட்டோம். எனவே வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் 150 கிமீ வேகத்தில் வரும் பந்துகளை சந்தித்தால் , உங்கள் மனதில் ஏதோ ஒன்று இருக்கும். நீங்கள் அத்தகைய பந்துவீச்சாளர்களை விளையாடப் பழகியிருந்தால் இது வேறு விஷயம், ”என்று அகிப் கூறினார்.