பட்டதாரி இளைஞர் ஒருவர் வருடத்திற்கு 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு தற்பொழுது தனது  மனைவியுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  பீகாரை சேர்ந்த அனுரப்  சின்ஹா எட்டாம் வகுப்பிலிருந்து ஐஐடி பட்டப்படிப்புக்கு தயாராகி வந்தவர். 12ஆம் வகுப்பு முடித்ததும் இவருக்கு ஐஐடியில் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு வழியாக பட்டப்படிப்பை முடித்து வெளிநாட்டில் வேலை தேடி சென்றார். இதற்கிடையில் 2015 இல் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் பல எண்ணிக்கையில் ஹோட்டல்களையும் நடத்தி வந்தார். இதனையடுத்து இவரும் இவருடைய மனைவியும் ஹோட்டல்களுக்கான சலவை தொழிலை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர் . மேலும் தரமான சேவை வழங்கவும் உறுதியளித்தனர். இந்நிலையி ஆண்டுக்கு 84 லட்சம் சம்பளம் வாங்கி வந்த அனுரப்  2014-ம் வருடம் அந்த வேலையை உதறி  தள்ளிவிட்டு 20 லட்சம் முதலீட்டி 2017 ஜனவரி மாதம் யூ கிலீன் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தற்போது இதனுடைய மதிப்பு 170 கோடி தற்பொழுது இந்தியா முழுவதும் 14 நகரங்களில் 35 கடைகளை திறந்து உள்ளார்.