
சென்னை மாவட்டம் அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கதிர் கலையரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கலையரசி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது தாய் சித்ராவின் வீட்டிற்கு சென்றார்.
அதன்பிறகு கதிர் அடிக்கடி மாமியாரின் வீட்டிற்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்துள்ளார். அதற்கு கலையரசி மறுப்பு தெரிவித்தார். நேற்று முன்தினம் குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு சென்ற கதிர் மீண்டும் கலையரசியை அழைத்தார்.
அதற்கு கலையரசி மறுப்பு தெரிவித்ததால் கதிர் பிளேடால் தனது வயிறு மற்றும் உடம்பில் பல்வேறு இடங்களில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கதிரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.