அமெரிக்கவில் ரேப் பாடல் பாடும்  லில் நாஸ் எக்ஸ், தனது முகத்தின் வலது பக்கம் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 26 வயதான இவர், தனது ஹாஸ்பிடல் படுக்கையில் இருந்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“நான் சிரிக்கிறேன்… ஆனா வலது பக்கம் சிரிக்கவே முடியல,” என நகைச்சுவை கலந்த வலியுடன் கூறியிருக்கிறார். தனது முகம் இயல்பு போல் செயல்படவில்லை என்றாலும், அவர் தனது ரசிகர்களை கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by ☆dreamboy. (@lilnasx)

முகத்தின் ஒரு பக்கம் இயங்காத நிலை, ‘Bell’s Palsy’ அல்லது ‘Ramsay Hunt Syndrome’ போன்ற நரம்பியல் கோளாறுகளால் ஏற்படக்கூடும் என ரசிகர்கள் எண்ணி வருகிறார்கள். ரேப்பர் ஜஸ்டின் பீபரும் 2022ல் இதே போன்ற நிலையை எதிர்கொண்டார்.

தற்போது லில் நாஸ் எக்ஸ், “நான் கொஞ்ச நாளுக்கு வேற மாதிரியா தெரிச்சா பரவாயில்லை, ஆனால் இது பெரிய விஷயமில்லை” என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு, ரசிகர்களின் ஆதரவை நாடியுள்ளார். ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து ‘Get well soon’ என்ற செய்திகள் குவிந்து வருகின்றன.