கேரள மாநிலம் பதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சு குமார். இவரது 11 வயது மகன் நண்பர்களுடன் விளையாட சென்று நீண்ட நேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளான். இதனால் கோபமடைந்த வின்சு குமார் தனது மகனை கண்டித்து, கம்பியை சூடாக்கி அவரது தொடை மற்றும் கால்களில் சூடு வைத்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் தனது மகனை பத்தனாபுரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து வின்சு குமாரை கைது செய்தனர்.