
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி திடீரென வயிறு வலி ஏற்பட்டதால் சிறுமியை போச்சம்பள்ளியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பிரசவத்திற்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமானவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.